Tuesday, June 26, 2007

காதல் 6


என்னுள் ஒழிந்திருந்த உன்னை

நான் எப்போதே கண்டுபிடித்து விட்டேன்

ஆனால் உன்னில் ஒழிந்திருக்கும் என்னை

ஏன் இன்னும் நீ உணராமல் இருக்கிறாய் ?

என்னை விடவும் உன்னைப் பற்றித்தான்

நான் அதிகமாக யோசிக்கிறேன் !!

எனக்கு பயமாக இருக்கிறது !!

ஒருவேளை நான் உன்னைப் பற்றியே நினைத்து

என்னை மறந்து விடுவேனோ என்று ?

தயவு செய்து என்னைக் கொடுத்து

உன்னைப் பெற்றுக் கொள் !!

அல்லது என்னையாவது உன்னுள்

தேடி கண்டுபிடித்து விடு !!

முடிவை சீக்கிரம் எடு !! இல்லையேல்

முடிவே முடிவாகிவிடும் நம் என் காதலுக்கு !!!

காதல் 5



காதலிப்பதும் சுகம் !!


காதலிக்கப்படுவதும் சுகம் !!


காதலியின் கணநேர கடைக்கண் பார்வைக்காக


காத்திருக்கும் நேரங்களும் சுகம் !!


கனவில் காதலியின் வரவை


கண்டு ரசிப்பதும் சுகம் !!


கல்லூரி வகுப்பில் அவள் முகம்


காணாமல் கரைவதும் சுகம் !!


காதலின் பிரிவின்போது


கடந்தகால நினைவுகளில்


கலந்து கிடப்பதும் சுகம் !!


காண்பதெல்லாம் சுகமே


காதல் உன்னை அடைந்தபின்னே !!!

Thursday, June 21, 2007

காதல் 4



காதல் இல்லையென்று


கடுமையாகச் சாடியவனை


கட்டிவைத்து உதைத்தேன் !!


கண்டவர்கள் சொன்னார்கள்


காட்டுமிராண்டி,இதயமில்லாதவன் என்று !!


உண்மைதான் !!


உன்னிடம் இதயத்தை


இழந்த நான் இதயமில்லாதவன் தான் !!!

காதல் 3


இ(ரு)தய அடைப்பின் விளைவுகளை

விளக்கும் உன்னிடம் எப்படி

விளக்குவேன் என் இதயத்தின்

அடைப்பிற்கு காரணம் நீதானென்று !!!

காதல் 2



காத்திருக்கிறேன் !!!

காதலென்பதொரு கண்ணாமூச்சியென்ற

கருத்தறிந்து உன்னைக்

கண்டவுடன் காதலில் விழுந்து பின்

கவிதைப்பித்தனாய் மாறிய,

கருத்துப்பிழை !! பொறுத்துக்கொள் !!

உன் கண்களால், காதலால் மாற்றப்பட்ட

கத்துக்குட்டி கவிஞன்

கனவிலேனும் உன் வரவுக்காக !!!

காதல் 1




கனவு காணவும் ஆசைதான், ஆனால்


கண்மூடி உறங்கத்தான் முடியவில்லை


காரணம் என்னவென்றும் விளங்கவில்லை !!!


கண்ணுக்குள் நீயிருந்து காலமெல்லாம் செய்யும்


கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முடிவுதான் என்று ?


கனவிலேனும் உன்னை


காதலியாகக் காணும் ஆசையுடன்


காத்திருக்கிறேன் கண்மணியே கண்மூடி !!!

கிறுக்கல் 3



கல்லூரி நாட்களில் கிண்டல் செய்ததுண்டு

காதல் பைத்தியங்களை

காலத்தின் ஓட்டத்தில் இன்று

கேலி செய்கிறேன்

காதலில்லா பைத்தியங்களை !!!

கிறுக்கல் 2


கார்த்திகை மாதத்திற்காக

காத்திருக்கிறேன் வருடம் முழுவதும்

காலையில் தினமும் உன் தரிசனம் கிடைக்குமென்பதற்காக !!!

கிறுக்கல் 1


அலாரம் வைக்காமலேயே

அதிகாலையில் அலறியடித்து எழுகிறேன்

கனவில் உன் அண்ணன் முகம் !!!